மின்னணு வாக்காளர் அடையாள அட்டை: 2 நாள் நடைபெறும் சிறப்பு முகாம்…!!

3 March 2021, 8:55 am
e-voter - updatenews360
Quick Share

சென்னை: மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய வருகிற 13 மற்றும் 14ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021ன் போது, புதிதாக வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் தங்களது செல்போன் எண்ணை வழங்கிய வாக்காளர்கள் அனைவருக்கும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதற்கு ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் 2 நாட்கள் சிறப்பு முகாம் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவின்படி வருகிற 13ம் தேதி மற்றும் 14ம் தேதி ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம் நடத்த அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2021ன் போது வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் இந்த முகாமினைப் பயன்படுத்தி தங்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை தங்களது செல்போன்/ கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 12

0

0