தடுப்பூசிக்காக மக்கள் அலைமோதுவதை தடுக்க சிறப்பு முகாம் : கோவை கேம்போர்டு பள்ளி சார்பில் சிறப்பு ஏற்பாடு!!

6 July 2021, 8:12 pm
Camford- Updatenews360
Quick Share

கோவை : கேம்போர்டு பள்ளி சார்பில் கோவையில் இன்று இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வரும் சூழலில், மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு தரப்பில் போதிய தடுப்பூசி இல்லாத காரணத்தால் மக்கள் தடுப்பூசிக்காக அலைமோதி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேம்போர்டு சர்வதேச பள்ளியின் தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ், கங்கா மருத்துவமனை மற்றும் ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆகிய இரண்டு மருத்துவமனைகளுடன் இணைந்து மணியகாரம்பாளையத்தில் குடியிருப்போருக்கு இலவச தடுப்பூசி முகாமை நடத்தினார்.

மணியகாரம்பாளையம் சமுதாயக் கூடத்தில் நடந்த இந்த முகாமில் இரண்டுகட்டமாக 610 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. . கம்போர்டு சர்வதேச பள்ளி குழுவும், கங்கா மருத்துவமனை மற்றும் ராமகிருஷ்ணா மருத்துவமனையும் இணைந்து மணியகாரம்பாளையம் பகுதியில் தேவையானோருக்கு மக்களுக்கு இந்த தடுப்பூசி போடும் பணியை சிறப்பாக மேற்கொண்டது

Views: - 96

0

0