தமிழகம் முழுவதும் நாளை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்பு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan14 ஜூலை 2023, 1:42 மணி
தமிழகம் முழுவதும நாளை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்பு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நாளை சனிக்கிழமை (ஜூலை 15) முழுவேலைநாளாக வழக்கம்போல் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுவதால் நாளை பள்ளிகள் செயல்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளிகளில் காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்திடவும் பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.
Views: - 372
0
0