கொரோனாவால் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ‘ஸ்மைல்’ திட்டத்தின் மூலம் சிறப்பு கடன் : குமரி ஆட்சியர் தகவல்

8 July 2021, 2:24 pm
Kumari Collector- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஸ்மைல் திட்டத்தின் மூலம் சிறப்பு கடன் பெறலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்திருப்பின், அவர்களின் குடும்பத்தின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பொருளாதார வளர்ச்சி கழகம் ‘ஸ்மைல்’ என்ற கடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 3 இலட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60 வயதுக்குள் இருக்கவேண்டும், இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர், கொரோனா தொற்றால் உயிரிழந்ததற்கான ஆவணங்களுடன், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 275

0

0