சசிகலா நலம் பெற சிறப்பு பூஜை : அதிமுக முன்னாள் எம்எல்ஏ குடும்பத்துடன் பிரார்த்தனை!!

22 January 2021, 11:16 am
Admk Former Mla - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : சசிகலா பூரண நலம் பெற வேண்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ தனது குடும்பத்தினருடன் சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு சிறையிலிருந்து உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா பூரண நலம் பெற வேண்டி பல்வேறு பகுதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் இன்று தனது குடும்பத்தினருடன் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் பூஜையில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சசிகலா பூரண நலம் பெற்று தமிழகம் வந்து தமிழகத்தை வழிநடத்த வேண்டும் என்ற தனது விருப்பம் காரணமாக இந்த சிறப்பு பிரார்த்தனை மற்றும் பூஜையில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.

முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் அதிமுகவிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட நிலையில் அவர் சசிகலாவின் உடல் நலம்பெற வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டது கன்னியாகுமரி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 0

0

0