இரண்டு மாதங்களுக்கு பின்பு பள்ளி வாசலில் நடைபெற்ற தொழுகை : சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!

5 July 2021, 4:46 pm
Quick Share

கோவை: கொரோனா ஊரங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், இரண்டு மாதங்கள் கழித்து கோவையில் உள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தது. பக்தர்கள் வழிபாடு நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கோவில்களில் அந்தந்த பணியாளர்கள் மட்டும் சென்று வழக்கமான பூஜைகளை செய்து வந்தனர். ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் தமிழகத்தில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக கோவையில் உள்ள கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இரண்டு மாதத்திற்கு பிறகு கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசலில் சமூக இடைவேளை பின்பற்றி தொழுகை நடைபெற்றது.இதனால் இஸ்லாமிய பெருமக்கள் தொழுகையின் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Views: - 94

0

0