நடிகர் ரஜினிக்கு எதுல கண்டம்… ஆன்மீகமா? அரசியலா? பிரபல ஜோதிடர் கணிப்பு!!

9 November 2020, 4:22 pm
Rajini - Updatenews360
Quick Share

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்ததில் இருந்து அவரின் ஆதரவாளர்கள் நீண்ட காலமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். இதோ இப்போ வருகிறார் என அவ்வப்போது வந்த செய்திகள் ரசிகர்களையும், அவரது ஆதரவாளர்களின் பிபியை ஏற்றியது. ஆனால் வந்த பாடில்லை.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. இந்த நேரத்திலாவது தலைவர் வருவார் என ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாய் ஒரு செய்தி வந்தது. அவரின் உடல்நிலை சரியில்லை என்று. உடனே அதற்கு மறுப்பு தெரிவித்த ரஜினி, உடல்நிலை ஒவ்வாத காரணம் என்பது உண்மையே என்றும் விளக்கம் அளித்தார். மேலம் மருத்துவர்கள் உடல்நிலையில் கவனம் தேவை எனக் கூறியதாக ரஜினி தெரிவித்திருந்தார்.

Social, political decay rife, says Rajini as he recollects Cho's 'fearless'  journalism - The Federal

இந்த நிலையில் அவர் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டவைத்து ரஜினியை அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜோதிடர் சாந்தகுமார் கணித்துள்ளார்.

22 ஆண்டுகளை ஜாதகம் பார்த்து வரும் சாந்தகுமார், தற்போது நடிகர் ரஜினிகாந்தின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில், வரும் டிசம்பர் மாதம் முதல் 3 ஆண்டுகள் அவருக்கு கெட்டகாலம் என்றும், எந்த சூழ்நிலையிலும் அவர் அரசியலில் ஈடுபடக்கூடாது, வீட்டில் இருந்து ஓய்வு பெறுவது நல்லது என்றும் கூறியுள்ளார்.

Rajinikanth in Himalayas – My Take

ஆன்மீகத்தில் ஈடுபட்டால் கண்டத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம், அரசியலுக்கு வந்தால் அவர் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்றும், மிகப்பெரிய எதிரிகூட்டம் உருவாகும் என்றும், அவர் ஆன்மீகத்தில் ஈடுபட்டால் இன்னும் 16ஆண்டு காலம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என கூறியுள்ளார்.

59+ Superstar Rajnikanth Images free download - Agatha Adkins

கடந்த 2010ம் ஆண்டு அவருக்கு சிரமமான காலம் ஏற்பட்டது, அதே போன்று இந்த வருடமும் அவருக்கு சிரமமான காலம் என்றும், அவரின் மகர ராசி சிம்ம லக்னத்திற்கு டிசம்பர் மாதம் சனி பெயர்ச்சி வருகிறதால் அவருக்கு உடல் உபாதைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் ஜோதிடர் கணித்துள்ளார்.

Behind Rajinikanth Ill Health!

ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வந்தால் அவதி ஏற்படும் என்ற ஜோதிடர் கணிப்பால் அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் வருத்தத்தில் உள்ளனர். எது எப்படி நடக்கும் என்றும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Views: - 24

0

0