இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் உயிரிழந்த விவகாரம்… இரண்டு பெண்களுக்கு தொடர்பு…

2 August 2020, 8:40 pm
Quick Share

கோவை: இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் லசந்தா சந்தனா என்கிற அங்கொட லொக்கா உயிரிழந்த விவகாரத்தில் இரண்டு பெண்களுக்கு தொடர்பு உள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இலங்கையில் தேடப்பட்டு வரும் குற்றவாளியும், பாதாள உலகக் குழு உறுப்பினரான லசந்தா சந்தனா என்கிற அங்கொட லொக்கா இந்தியாவில் விசம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. மேலும் அங்கொட லொக்காவுடன் இந்தியாவில் வசித்துவந்த முல்லேரியா ரஹ்மான் என்பவரின் மனைவி அங்கொட லொக்காவின் உணவில் விசத்தை கலந்ததாகவும், அந்த உணவை உட்கொண்டமையினால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இலங்கையில் சிறையில் உள்ள லொக்காவின் எதிரிகளும் வெளிநாடுகளில் இருப்பவர்களும் இந்த திட்டத்தை தீட்டியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதில், விசம் உடலில் கலந்த நிலையில், கவலைக்கிடமான முறையில் பெங்களூரில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கொட லொக்கா கடந்த 3 ஆம் திகதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்த அங்கொட லெக்கா உடலை பிரதீப் சிங் என்ற பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்து மதுரை எடுத்துச் சென்று தகனம் செய்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அங்கொட லொக்கா சடலத்தை பெற இரண்டு பெண்கள் உதவியதாகவும்,

அவர்கள் சிவகாமசுந்தரி மற்றும் அம்மானிதாஞ்ஞி என்பதும், அங்கொட லொக்காவின் சடலத்தை பெற சிவகாமசுந்தரி சகோதரி போலவும், அம்மானி தாஞ்ஞி காதலி போலவும் நாடகமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இரு பெண்கள் குறித்து நடத்திய விசாரணையில், அங்கொட லொக்கா இலங்கையில் இருந்து தப்பி வரவும், கோவையில் தங்கவும் சிவகாமசுந்தரி, அம்மானிதாஞ்ஞி, தியானேஸ்வரன் ஆகியோர் உதவியுள்ளது தெரிய வந்துள்ளது. போலீசார் சடலத்தை மதுரைக்கு கொண்டு செல்ல உதவிகள் குறித்தும், கோவையில் வேறு யாராவதுக்கும் தொடர்பு உண்டா என தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Views: - 12

0

0