இன்று கிருஷ்ண ஜெயந்தி…! ஸ்ரீ கிருஷ்ணரின் வடிவங்கள் எத்தனை தெரியுமா..?

11 August 2020, 2:29 pm
Lord-Krishna- updatenews360
Quick Share

கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீகிருஷ்ணன் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார். மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
யசோதையின் மடியிலே அமர்ந்த கோலத்தில் சந்தான கோபாலகிருஷ்ணன் காட்சி தருகிறார்.

பாலகிருஷ்ணன் தவழும் கோலத்தில் ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம். காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணனை கண்டு களிக்கலாம்.

கோவர்த்தனதாரி என்பது கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம் ஆகு‌ம்.


 
ராதாகிருஷ்ணன் என்கிற வேணுகோபாலன் வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணனை தரிசித்து மகிழலாம்.

கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலமே முரளிதரன் வடிவம் ஆகும். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.

அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன் மதனகோபாலன் என்று அழைக்கப்படுகிறார். அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலத்தில் பார்த்தசாரதி ஆக காட்சி தருகிறார்.

கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணரின் மாறுபட்ட தோற்றங்களை வணங்கி மகிழ்வோம். கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் உபதேசங்களே இந்துக்களின் புனித  நூலான பகவத் கீதையானது.