ஸ்ரீரங்கம் அதிமுகவின் எஃகு கோட்டை : கொட்டும் மழையில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை!!

31 December 2020, 6:00 pm
Srirangam CM -Updatenews360
Quick Share

திருச்சி : ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜகோபுரம் முன்பு அமைக்கப்பட்டிருந்த பிரச்சார மேடையில் கொட்டும் மழையில் அதிமுகவிற்கு வாக்கு சேகரித்தார்.

ஸ்ரீரங்கம் தொகுதி என்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியானது அதிமுகவின் கோட்டையாகவும் விளங்குகிறது. பெருவாரியான வாக்குகள் அதிமுகவிற்கு அளித்து தமிழகத்தில் அதிமுக வெற்றி பெறுவதற்கு ஸ்ரீரங்கம் தொகுதி உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் மேலும் அம்மாவின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அதில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கும் வசதிக்காக யாத்ரி நிவாஸ் கட்டப்பட்டு சிறப்பான முறையில் பராமரித்து வருகின்றனர். மேலும் மணப்பாறையில் காகித தொழிற்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன மற்றும் மேலணை கதவணை பணிகள் விரைவில் முடிவடையும் என்று பேசினார்.

ஸ்ரீரங்கத்தில் தரிசனம் செய்த முதலமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் பகுதியிலும், பின்னர் சோமரசம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழையிலும் வேனில் இருந்தபடியே பரப்புரை மேற்கொண்டார். இதேபோல அவருக்கு ஏராளமான அதிமுகவினர் கொட்டும் மழையிலும் திரண்டிருந்தது வரவேற்பு அளித்தனர்.

Views: - 6

0

0