தற்கொலைகளின் கூடாரமாக மாறும் எஸ்ஆர்எம் கல்லூரி : 23 வயது மாணவி தற்கொலை… விசாரணை கோரும் அரசியல் தலைவர்கள்..!!!

13 January 2021, 4:43 pm
srm - updatenews360 - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் 23 வயது மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இந்து (27) என்னும் மாணவி, செங்கல்பட்டுவை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் பிடிஎஸ் படித்து முடித்தார். மேலும், அதே மருத்துவக் கல்லூரியில் எம்டிஎஸ் படித்து வந்ததுடன், அங்கு மருத்துவராகவும் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், நேற்று நீண்ட நேரமாகியும் அவரது அறை திறக்கப்படாத நிலையில், சந்தேகமடைந்த சக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் ஜன்னல் வழியே அறைக்குள் எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது, மின்விசிறியில் இந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இது தொடர்பாக போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இந்துவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த மாதம் 11ம் தேதிதான் இந்துவின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால், அவர் தொடர்ந்து மன உளைச்சலில் காணப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

தந்தையின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல், அவர் தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது மருத்துவமனை நிர்வாகத்தின் அழுத்தம் ஏதாவது இருக்கிறதா..? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே எஸ்ஆர்எம் கல்லூரியில் மாணவ, மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தற்கொலைகளின் பிறப்பிடம் என்று சொல்லும் அளவிற்கு எஸ்ஆர்எம் வளாகத்தில் மாணவர்களின் உயிர் பறிக்கப்படுவதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், மாணவர்களின் தொடர் தற்கொலைகளுக்கு என்ன காரணம்..? என்பது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 11

0

0