நவீன தீண்டாமையை கடைபிடிக்கும் ஸ்டாலின் : எல்.முருகன் குற்றச்சாட்டு

By: Udayachandran
13 October 2020, 5:51 pm
Murugan - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நவீன தீண்டாமையை கடைபிடித்து வருவதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பட்டியலின மக்களின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டார் .

பின்னர் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில், பலம் பொருந்திய அமைப்பாக பாஜக மாறி வருகின்றது. இளைஞர்களும் பெண்களும் சாரை சாரையாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து வருகின்றனர்.

பட்டியலின மக்களிடம் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த மாநில செயற்குழு கூட்டத்தில்கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் மிக சுதந்திரமாக செயல்பட தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

அப்படி இருக்கும்போது பட்டியல் இன மக்களை தரக்குறைவாக பேசிய திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத ஸ்டாலின் தமிழகத்தில் மூன்றாவது மொழி வேண்டாம் எனக்கூறி நவீன தீண்டாமையை கடைபிடிக்கிறார்.

பட்டியலின மக்கள் பெரும்பாலும் அரசு பள்ளியில்தான் படிக்கின்றனர். தமிழ் ஆங்கில மொழியைத் தவிர மற்ற கூடுதலாக ஒரு மொழி படித்தால் நல்லது என்ற எண்ணம் கூட இல்லாமல் ஸ்டாலின் மற்றும் அவரின் கூட்டணி கட்சிகள் எதிர்க்கின்றன. காங்கிரஸ் ஆட்சியில் தான் அண்ணல் அம்பேத்கருக்கு சிறுமை ஏற்பட்டது.

மேடை எங்கும் நாங்கள் பட்டியலினமக்களுக்கு ஆதரவாக இருப்போம் கூறிக்கொண்டு அண்ணல் அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியுடன் திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணி வைத்து கொண்டுள்ளது. இப்போது பட்டியலின மக்கள் திமுகவின் நாடகத்தை மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டுள்ளனர்.

மோடியின் ஆட்சியை அனைத்து மக்களும், அனைத்து சமூகத்தினரும் வரவேற்கின்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பட்டியல் இன மக்கள் திமுகவுக்கு நன்றாக பாடம் கற்பிப்பார்கள் என கூறினார்

Views: - 36

0

0