தமிழகத்திற்கு ‘மேஜிக் லாலிபாப்’ : மத்திய பட்ஜெட் குறித்து முக ஸ்டாலின் விமர்சனம்..!!

1 February 2021, 7:22 pm
Quick Share

சென்னை : மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், ஒரு மாய லாலி பாப்பை கொடுத்து ஏமாற்றி இருப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டின்‌ திட்டங்களுக்கு ஆக்கபூர்வமான நிதி ஒதுக்கீட்டை செய்யாமல்‌ – தாகத்தால்‌ தவிக்கும்‌ பசுவுக்குக்‌ கானல்‌ நீரைக்‌ காட்டுவது போல, தமிழக மக்களுக்கு, சட்டப்பேரவைத்‌ தேர்தலையொட்டி, மத்திய அரசு ஒரு “மாய லாலிபாப்‌”-ஐ கொடுத்து ஏமாற்றி இருக்கிறது.

நதி நீர்‌ இணைப்புத்‌ திட்டங்களுக்கோ, நிவர்‌, புரெவி, கனமழை பாதிப்பு உள்ளிட்டவற்றிற்கான நிதியோ எதுவுமே இந்த நிதி நிலை அறிக்கையில்‌ ஒதுக்கப்படவில்லை. தேர்தல்‌ ஆண்டில்கூட தமிழக விவசாயிகளின்‌ விருப்பத்திற்கு எதிராக நடப்போம்‌ என சென்னை-சேலம்‌ பசுமை வழிச்சாலைத்‌ திட்டத்தை நிறைவேற்றுவோம்‌ என நிதியமைச்சர்‌ அறிவித்துள்ளார்‌.

பெட்ரோல்‌, டீசலுக்கு புதிதாக செஸ்‌ வரி விதிக்கப்பட்டிருப்பதால்‌ விலை மேலும்‌ அதிகரிக்க வாய்ப்புள்ளது. மக்களுக்கு நேரடி பணி உதவி வழங்குவது குறித்த அறிவிப்பு ஏதும்‌ இல்லை. இந்திக்கு மொழியெரப்புத்‌ திட்டம்‌ உருவாக்கப்பட்டு, மாநில மொழிகள்‌ – குறிப்பாக தமிழ்‌ மொழி வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

75 வயதுள்ள மூத்த குடிமக்கள்‌ வருமான வரி கணக்குத்‌ தாக்கல்‌ செய்ய வேண்டியதில்லை என்றுக கூறிவிட்டு அடுத்த வரியிலேயே அவர்களுக்குப்‌ பணம்‌ செலுத்தும்‌ வங்கியே தேவைப்பட்ட வரியைப்‌ பிடித்து விடும்‌ என்று கூறியிருப்பது
வெறும்‌ கண்துடைப்பு. எனவே, விவசாயிகள்‌, வேலை வாய்ப்பின்றித்‌ தவிக்கும்‌ இளைஞர்கள்‌, தொழிலாளர்கள்‌, ஏழை – எளிய நடுத்தர மக்கள்‌ அனைவருக்கும்‌ பயனில்லாத, ஒரு சில பகட்டு அறிவிப்புகளைக்‌ கொண்ட பட்ஜெட்‌ இது.”, என தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0