கோவையை பிடித்துவிடலாம் என்னும் ஸ்டாலினின் ஆசை நிறைவேறாது : அமைச்சர் எஸ்பி வேலுமணி அதிரடி!!

2 November 2020, 8:18 pm
Sp velumani - updatenews360
Quick Share

கோவை : வரும் சட்டப்பேரவை தேர்தலில் கோவை மாவட்டத்தை பிடித்து விடலாம் என்ற ஸ்டாலினின் கனவு ஒருபோதும் நனைவாகாது என்று அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை ஈச்சனாரி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் கோவை மாவட்ட அதிமுக சார்பில் கோவை மாநகர் மாவட்டம் மற்றும் கோவை வடக்கு, தெற்கு கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாரிசு, கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- திமுகவின் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பொய் புகார்களை கூறிக் கொண்டு சென்றுள்ளார். மேலும், கோவை மாவட்டத்தில் மீது ஸ்டாலினுக்கு ஒரு கண் உள்ளது. எப்படியாவது கோவை மாவட்டத்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஸ்டாலினுக்கு உள்ளது. அவர் கனவு காண்கிறார். இந்த மாவட்டம் அம்மாவின் கோட்டை ஒருபோதும் இதை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

தமிழக முதல்வர் கொங்கு மண்டலத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை ஐந்து ஆண்டுகளில் கொடுத்துள்ளோம். வாக்கு கேட்க நமக்கு மட்டுமே தகுதி உள்ளது. திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை. அவர்கள் எதுவும் செய்யவில்லை. பொய் மட்டுமே பரப்புவார்கள். திமுக நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றார்கள். முற்றிலும் புறம்பான வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள். தேர்தல் நேரத்தில் மொத்தம் மக்களை ஏமாற்றி வருபவர்கள் திமுகவினர் தேர்தலுக்குப் பிறகு அவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

ஓபிஎஸ் அவர்கள் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அறிவித்தார். அன்றைக்கே எடப்பாடி அவர்கள் தான் முதல்வர். ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. நாம் பல்வேறு திட்டங்களை செய்துள்ளோம். அனைத்து திட்டங்களையும் கோவை கொண்டு வந்துள்ளோம். கீழ்த்தட்டு மக்கள் பிசினஸ்மேன் என அனைவரும் பாராட்டுகிறார்கள். முதல்வரை அற்புதமான ஆட்சி செய்து வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நீட் தேர்வில் பல்வேறு பிரச்சனை இருந்து வந்தது. தற்போது 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.

மக்களுக்கு என்னென்ன தேவையோ, அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறார். முதல்வர், துணை முதல்வர் இருவருக்குள் பிரச்சனை வரும் என திமுக நினைத்தது. ஆனால் அதிமுகவை பொறுத்தவரை ஒற்றுமையாக இருந்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சாதாரண விவசாயி அதிமுகவில் முதலமைச்சர் ஆகலாம். குடும்ப அரசியல் திமுக செய்து வருகிறது.

மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் அது உறுதி. தலைமைக்கழகம் நமக்கு என்னென்ன வேலைகளை கொடுக்கிறதோ, அந்த வேலைகளை நாம் செய்ய வேண்டும். கோவை மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் 5 கல்லூரிகள் என பல்வேறு திட்டங்களை தொடர்ந்து கொடுத்துள்ளோம். தேர்தல் வர மூன்று மாதம் தான் உள்ளது.
கழகத் தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்து அதிமுக அரசின் பல்வேறு நலத் திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை பொழிகிறது. அனைத்து குளங்களும் நிரம்பி உள்ளது. ராசிக்கான முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் சென்னையில் 3 ஆயிரத்து 400 இடங்களில் தண்ணீர் தேங்கும் அனைத்து இடங்களும் சரிசெய்யப்பட்டது. 20 சென்டிமீட்டர் மழை பெய்தது அப்படியே நீர் வடிந்து விட்டது.

ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது எதுவும் செய்யவில்லை. மக்கள் நம்மை எப்பொழுதும் ஆதரிப்பார்கள். திமுகவைப் பொறுத்தவரை அவதூறு பரப்புவதே குறிக்கோள் அம்மா அரசு வந்தவுடன் கட்டப்பஞ்சாயத்து இல்லை. நில அபகரிப்பு இல்லை. கடைகளில் வசூல் கிடையாது. தகவல் தொழில்நுட்பம் பிரிவு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

சூயஸ் திட்டம் 24 மணி நேர திட்டம், இதனை தவறாக சித்தரித்து வருகிறார்கள். திமுகவினர், சூயஸ் திட்டத்தை திமுகவினர் தான் கொண்டு வந்தனர். இந்த திட்டத்தைப் பற்றி பொய்யான தகவல்களை தற்போது திமுக பரப்பி வருகிறது. தண்ணீர் விலை ஏறிவிடும் என பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறார்கள். ஆர்எஸ் பாரதி என்மேல் வழக்கு போட்டு உள்ளார். ஆதாரமில்லாமல் வழக்குப் போட்டது திமுக ஆதாரம் இருந்தால் நான் ராஜினாமா செய்கிறேன்.

பொதுமக்களுக்கு பல்வேறு வளர்ச்சிகளை கொடுத்துள்ளோம். குறுக்கு வழியில் வழியைத் தேடி வருவது திமுக தான். விவசாய கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி என பொய்யான பிரச்சாரங்களை செய்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். ஆனால் உறுதியாக 2021ல் எடப்பாடி தான் முதலமைச்சர். இதை யாரும் மாற்ற முடியாது. இந்த தேர்தலில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி. மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களை அரவணையுங்கள். புதிதாக வந்திருக்கும் பொறுப்பாளர்கள், கட்சிக்காக இருந்தவர்களை மதியுங்கள். மக்களை நேரடியாக சந்தியுங்கள். பாசறை கூட்டம் பூத் வாரியாக போட வேண்டும். ஒவ்வொரு வாக்குகளும் நமக்கு முக்கியம்.

எம்ஜிஆர் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். அன்னதானம் போடப்படவேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள என 11 தொகுதியிலும் யாரை வேட்பாளராக அறிவித்தாலும், அவர்களுக்காக பணியாற்ற வேண்டும். மேலும், மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
அனைத்து தரப்பு மக்களும் முதல்வரை நேசித்து வருகிறார்கள். அம்மாவுடைய ராசி மறுபடியும் நாம் ஆட்சியைப் பிடிப்போம், என்றார்

Views: - 22

0

0

1 thought on “கோவையை பிடித்துவிடலாம் என்னும் ஸ்டாலினின் ஆசை நிறைவேறாது : அமைச்சர் எஸ்பி வேலுமணி அதிரடி!!

Comments are closed.