மாணவர்களின் உயிருடன் ஸ்டாலின் விளையாடுகிறார் : எல்.முருகன் குற்றச்சாட்டு

13 September 2020, 4:06 pm
Tirupur L Murugan- Updatenews360
Quick Share

திருப்பூர் : மாணவர்களின் உயிருடன் ஸ்டாலின் விளையாட கூடாது என்றும் மாணவர்களின் செண்டிமெண்டை தவறாக திசை திருப்புகிறார்கள் என்றும் பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் சிறுபூலுவபட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது , எல்லா விஷயங்களிலும் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்றும் , மாணவர்களின் உயிருடன் ஸ்டாலின் விளையாட கூடாது என்றும் தேர்வு பயம் தொடர்பாக அரசு சார்பில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் , மாணவர்களின் செண்டிமெண்டை தவறாக திசை திருப்புவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் நீட் தேர்வு என்பது உச்சநீதிமன்றம் வரை சென்று தீர்ப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் நடக்கிறது. தமிழகத்தில் புதிதாக 15 மருத்துவ கல்லூரிள் வர உள்ள சூழலில் , தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றும் கூறினார்.

சில நாட்களுக்கு முன்னர் , பா.ஜ.க மூத்த நிவாகிகளுக்கும் , அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது குறித்த கேள்விக்கு , எல்லாம் சுமூகமாக இருக்கிறது , எந்த பிரச்சனையும் இல்லை என கூறினார்.

நீட் தேர்வு தொடர்பாக மாநில அரசு கொண்டு வந்திருக்கும் 10% உள் இடஒதுக்கீட்டை நாங்கள் வரவேற்கிறோம். துரித நடவடிக்கை எடுத்து அதனை அமல்படுத்த வேண்டும் என்றதுடன் அனைத்து தனியார் பள்ளிகளையும் போல அரசு பள்ளி மாணவர்களும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு என கூறினார்.

2016 ல் 75 இடங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயத்தது பா.ஜ.க.அதன் அடைப்படையில் தான் தற்போது 60 இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறியுள்ளதாகவும் , இப்போதைக்கு இதே அணிகள் நிலைத்து வருகிறது. தேர்தல் வரும் போது தான் அது பற்றி தெரிய வரும் என்றார்.

Views: - 0

0

0