கணவரை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்த துர்கா : ஸ்டாலின் பதவியேற்பில் நடந்த சுவாரஸ்யம்..!!

7 May 2021, 9:56 am
stalin wife - updatenewsw360
Quick Share

சென்னை : தமிழகத்தின் முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது, தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அதைத்தொடர்ந்து முதலமைச்சரான மு.க.ஸ்டாலினை அறிவித்ததுடன், பதவி ஏற்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்று வருகிறது. திமுக எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோல, முக ஸ்டாலினின் குடும்பத்தினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

stalin oath - updatenewsw360

பின்னர், நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பும் செய்து வைத்தார். அப்போது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் எனக் கூறி, அவர் பதவியேற்றுக் கொண்டார்.

stalin wife - updatenewsw360

அப்போது., மேடையின் கீழ் பகுதியில் அமர்ந்திருந்த ஸ்டாலினின் மனைவி துர்கா ஆனந்த கண்ணீர் வடித்தார். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதேபோல. இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 247

0

0