நாளை திருவாரூர் செல்லும் ஸ்டாலின் : முதலமைச்சரான பின் முதன்முறையாக திருவாரூர் பயணம்!!

5 July 2021, 2:40 pm
Thiruvarur Stalin - Updatenews360
Quick Share

ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக நாளை திருவாரூரில் உள்ள முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்கிறார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக வெற்றி பெற்று,தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் கடந்த மே மாதம் 7 ஆம் தேதியன்று ஆட்சிப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்கள் பிறந்த ஊரான திருவாரூருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை செல்கிறார்.

ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக முதல்வர் அங்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி,நாளை மதியம் சாலை வழியாக திருவாரூர் சென்று,மறைந்த கருணாநிதி அவர்களின் இல்லத்தில் மரியாதை செலுத்தவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து,காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்கு சென்று முதல்வர் மரியாதை செலுத்துகிறார். பின்னர்,பயணத்தை முடித்து விட்டு நாளை மறுநாள் சென்னை திரும்ப முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 138

0

0