தயாநிதி மாறனால் மாட்டிக்கொண்ட ஸ்டாலின்… டிவிட்டரில் டிரெண்டாகும் #மாமாஸ்டாலின்!!

Author: Udayachandran
1 August 2021, 6:41 pm
Stalin Mama - Updatenews360
Quick Share

கர்நாடக ஆளும் பாஜக மேகதாதுவில் அணை கட்ட பிடிவாதமாக இருந்து வரும் நிலையில், மேகதாதுவில் அணைக்கு எதிராக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்போம் என தமிழக பாஜக கூறியிருந்தது. மேலும், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக என்றுமே இருப்போம் எனக் கூறிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, ஆக.,5ம் தேதி கர்நாடகா அரசுக்கு எதிராக போராட்டத்தையும் அறிவித்தார்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன், கர்நாடக முதலமைச்சர் உடன் பேச்சுவார்த்தை நடத்த மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம் என கிண்டலாக கூறினார்.

Tamilnadu Bjp Leader Annamalai Asked To Dhayanithi Maran That Their Family  Jet Give To Farmers | சொந்த ஜெட் விமானத்தை விவசாயிகள் பயணத்திற்காக  தருவீர்களா? - தயாநிதி மாறனுக்கு ...

இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, “கொரோனா நோய்தொற்று பாதிப்பில் மக்கள் துன்புற்று இருந்தபோது டி20 விளையாட்டுப் போட்டியை ரசித்துக்கொண்டு இருந்த தயாநிதி மாறன் அவர்கள்… மேகதாது அணை பற்றி கவலைப்பட்டமைக்கு மிக்க நன்றி.தங்கள் சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தால் நம் மாநில ஏழை விவசாயிகளை அழைத்துக்கொண்டு தூது செல்ல நான் தயார் இதை அவர் மாமா திரு முக ஸ்டாலின் அனுமதிப்பாரா?,” என தெரிவித்தார்.

இந்த நிலையில் அண்ணாமலை பயன்படுத்திய வார்த்தையை டிவிட்டரில் ஹேஷ்டாக உருவாக்கப்பபட்டு டிரெண்ட செய்யப்பட்டு வருகிறது. தயாநிதிக்கு பதில் பேசிய அண்ணாமலை, தூது செல்ல தயார் இதை உங்கள் மாமா திரு மு.க. ஸ்டாலின் அனுமதிப்பாரா என கேட்டிருந்தார்.

இதனால் டிவிட்டரில் #மாமாஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு டிரெண்டாகி வருகிறது.

Views: - 376

2

0