மூத்த அரசியல் தலைவர் தா. பாண்டியன் விரைந்து குணம் பெற வேண்டும் : முக ஸ்டாலின்..!!

25 February 2021, 2:03 pm
Stalin Condemned- Updatenews360
Quick Share

சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் விரைந்து உடல்நிலை நலன் பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்ன தா.பாண்டியன் வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டார். நேற்று காலை உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுநீரக கோளாறு, நீரிழிவு நோய் உட்பட பல்வேறு உபாதைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த அழுத்தம் உள்ளதால் மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே, அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றம் இல்லை என்றும், கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மூத்த அரசியல் தலைவர் தா.பாண்டியன் விரைந்து உடல்நிலை நலன் பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் விரைந்து நலன் பெற்று மக்கள் தொண்டினைத் தொடர விழைகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 17

0

0