ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கும் பணி துவக்கம் : திருப்பூரில் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி வழங்கினர்!!

15 May 2021, 11:14 am
2 Thousand Rupees - Updatenews360
Quick Share

திருப்பூர் : 1135 ரேசன் கடைகளிலுள்ள 7,51,045 அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா முதற்கட்ட நிவாரண தொகை இரண்டாயிரம் வழங்கும் பணி துவங்கியது.

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா சிறப்பு நிவாரண நிதி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதில் முதல் கட்டமாக ரூ 2000 வழங்கும் பணியை தமிழக முதல்வர் கடந்த 10ம் தேதி துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேசன் கடைகள் மூலமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணை ரூ 2000 வழங்கும் பணி துவங்கியது.

இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் 1,135 ரேசன் கடைகளிலுள்ள 7,51,045 அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா முதற்கட்ட நிவாரண தொகை இரண்டாயிரம் வழங்கும் பணி துவங்கியது.

முன்கூட்டியே வழங்கப்பட்ட டோக்கன்களின் அடிப்படையில், பயனாளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தின் அடிப்படையில் காலை 8 முதல் 12 மணி வரை சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையாக வந்து இந்த தொகையினை பெற்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் காங்கயத்திலும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தாராபுரத்திலும், திருப்பூரில் திமுக எம்எல்ஏ செல்வராஜூவும் நிவாரண தொகையை வழங்கினர்.

Views: - 90

0

0