ஆரம்பமானது #AK 61 படப்பிடிப்பு.. அஜித்துடன் இணைந்த பிரபலம் : போனி கபூர் போட்ட அதிரடி கண்டிஷன்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2022, 6:47 pm
AK 61 -Updatenews360
Quick Share

அஜித்துடன் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கின்றனர்.

Ajith, Valimai director Vinoth and producer Boney Kapoor to join hands  again | The News Minute

சமீபத்தில் வெளியான வலிமை படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

Ajith's Next 'AK61' To Go On Floors Today With A Pooja Ceremony - India  Ahead

இதில் போனி கபூர், அஜித், ஹெச்.வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய உள்ள ஏகே 61 படம் தான் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுவது. இந்த நிலையில் இன்று ஏகே 61வது படத்தின் ஷீட்டிங்க ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இன்று துவங்கப்பட்டுள்ளது.

Thala 61': Boney Kapoor confirms his hattrick association with Thala Ajith  and H Vinoth

படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க போனி கபூர் கூறியுள்ளதாகவும், படத்தை வரும் தீபாவளியன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Ajith Starrer 'Valimai' Trailer Release Date Unveiled

மேலும் வலிமை படத்திற்காக ரசிகர்கள் அப்டேட் கேட்டு கெஞ்சியது போல் இந்த படத்திற்கு அவ்வாறு நடக்காத வண்ணம் இருக்க வேண்டும் என போனி கபூர் கண்டிஷன் போட்டுள்ளாராம்.

Valimai' Movie Review: Ajith Kumar's Valimai Directed by H Vinoth Is a  Shoddily Produced Tepid Affair

இந்த படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரு வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. பேங்க் கொள்ளையை கதைக்களமாக கொண்டுள்ள இந்த படத்தில் அஜித் கல்லூரி பேராசியராக நடிக்க உள்ளார்.

Valimai: Thala Ajith finishes shooting schedule despite injury during bike  stunt on sets? | PINKVILLA

ஒரு கல்லூரி பேராசியருக்கும் வங்கிக்கும் என்ன தொடர்பு என்பது தான் கதையாம். வலிமை படத்தில் உள்ளதை போல அதிகமான ஆக்ஷன் இல்லாமல் இந்த படத்தில் குறைந்த ஆக்ஷன் காட்சிகளை வைத்து த்ரில்லிங் காட்சிகள் அதிகமாக வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Valimai trailer out. Ajith impresses fans with high-octane stunts - Movies  News

அஜித் படத்திற்கு முதல்முறையாக ஜிப்ரான் இசையமைக்க உள்ளார். மேலும் ஒளிப்பதிவு நிரவ் ஷா, எடிட்டிங் விஜய் வேலுக்குட்டி என பெரிய யூனிட்டே வேலை செய்கிறதாம். இந்த படத்திற்கு ஜிப்ரான் ஏற்கனவே 2 பாடல்களை தயார் செய்து விட்டதாகவும், கதாநாயகி மற்றும் படத்தின் டைட்டில் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 916

4

1