‘ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தீர்ப்பை வரவேற்று சட்டம் இயற்றுக’ : முதலமைச்சருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்..!

18 August 2020, 12:48 pm
dmk_ stalin - updatenews360
Quick Share

சென்னை : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தீர்ப்பை வரவேற்று தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வலியுறுத்தியுள்ளார்.

நிலம், நீர் மற்றும் காற்று மாசுபாட்டினால், பொதுமக்களுக்கு பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கருதி, கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாந்தா குழுமம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வெளியிட்டது. அதில், ஸ்டெர்லைட் ஆலை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தொடரும் என தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பிற்கு
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு வரவேற்பு தெரிவித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கூறியிருப்பதாவது :- பொதுமக்கள், பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டெர்லைட்‌ ஆலையைத்‌ திறக்க அனுமதிக்க முடியாது என்ற உயர்நீதிமன்றத்தின்‌ தீர்ப்பை வரவேற்கிறேன்‌.

மக்களின்‌ நலனிலும்‌, சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பிலும்‌ நீதித்துறை வைத்துள்ள நன்மதிப்புக்கு நான்‌ தலை
வணங்குகிறேன்‌.

ஆலையை எதிர்த்து போராடியவர்கள்‌ மீது துப்பாக்கிச்‌ சூடு நடத்தி 13 அப்பாவி உயிர்களை கொடூரமாகப்‌ பறித்த
அரசின்‌ மாபாதகச்‌ செயலை தமிழக மக்கள்‌ எப்போதும்‌ மறக்க மாட்டார்கள்‌!

கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும்‌, இதுவரை நியாயம்‌ கிடைக்கவில்லை. தாமதமாகும்‌ நீதி,
மறுக்கப்படும்‌ நீதி!

தமிழகத்தின்‌ எதிர்ப்பால்‌ வேறு வழியின்றி ஸ்டெர்லைட்‌ ஆலையை அதிமுக அரசு மூடிய போது, திமுக உள்ளிட்ட
அனைத்துக்‌ கட்சிகளும்‌ “அமைச்சரவையைக்‌ கூட்டி ஸ்டெர்லைட்‌ ஆலை மூடுவதை கொள்கை முடிவாக
எடுங்கள்‌: என்று வலியுறுத்தியிருக்கிறோம்‌. அந்தக்‌ கோரிக்கை இன்னும்‌ அப்படியே இருக்கிறது.

முதலமைச்சர்‌ பழனிசாமி இன்றே தமிழக அமைச்சரவையைக்‌ கூட்டி தீர்ப்பை வரவேற்று அமைச்சரவை தீர்மானமாகவே வெளியிட வேண்டும்‌. அதை ஒரு சட்டமாகவே பிறப்பிக்க வேண்டும்‌.

ஆலையின்‌ தரப்பில்‌ மேல்‌ முறையீடு செய்தால்‌, தமிழக அரசைக்‌ கேட்காமல்‌ உயர்நீதிமன்றத்‌ தீர்ப்பிற்கு தடை
ஏதும்‌ விதிக்கப்படாமலிருக்க உச்சநீதிமன்றத்தில்‌ கேவியட்‌’ மனுவினை தமிழக அரசு தாக்கல்‌ செய்ய
வேண்டும்‌!, எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 29

0

0