ஊடகவியாளர் மதன் ரவிச்சந்திரன் மற்றும் எழுத்தாளர் வெண்பா மாதேயி ஆகியோர் Sting Operation எனக் கூறி அண்மையில் அடுத்தடுத்து வெளியிட்டு வரும் வீடியோக்கள் தமிழக ஊடகத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வீடியோக்களில் தமிழகத்தில் பிரபலமான சில மீடியாக்களின் நெறியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, அரசியல் தொடர்பான விஷயங்களையும், செய்தித்துறையில் நடக்கும் சில ரகசியங்களையும் வெளியிட்டனர்.
அந்த வகையில் நேர்காணல் மூலம் பிரபலமான ஆதன் மீடியாவைச் சேர்ந்த நெறியாளர் மாதேஷின் வீடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து, மாதேஷின் நிலை என்னவானது என்று தெரியாமல் இருந்தது. அவரது நேர்காணல் எதுவும் வெளியாகவில்லை.
மேலும், அவரது ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் மாதேஷ் குறித்து கேள்விகளையும், மீம்ஸ்களையும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், தனது தவறு குறித்து தன்னிலை விளக்கம் கொடுத்து மாதேஷ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தனது தவறை தான் உணர்ந்து கொண்டதாகவும், மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் தன்னை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் கண்கலங்கியபடி அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
இதனை பார்க்கும் நெட்டிசன்கள், நடந்தது நடந்தாகிவிட்டது, மேற்கொண்டு தொடர்ந்து உங்களின் பணியை மேற்கொள்ளுமாறு அவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.