அச்சம் காட்டும் கொரோனா : ஆட்சியர் அலுவலகத்தில் நேரடி மனு வாங்குதல் நிறுத்தம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2022, 11:19 am
Cbe Direct Petition Stop - Updatenews360
Quick Share

கோவை : கொரோனா எதிரொலியாக கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனு வாங்குதல் நிறுத்தப்பட்டு, பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

வாரந்தோறும் திங்கட்கிழமை நாட்களில் மக்கள் குறை தீர்ப்பு நாள் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடப்பது வழக்கம். இந்த நாளில் மக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக கொடுப்பார்கள்.

கொரோனா தொற்றின் எதிரொலியால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் நேரடியாக மனுவை பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் தங்களது மனுக்களை ஆட்சியரிடம் அளிக்க அலுவலக வளாகத்தில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

Views: - 266

0

0