இரண்டு பக்கம் தலை கொண்ட விசித்திர மண்ணுழி பாம்பு : இளைஞர்கள் பிடித்தனர்!!

8 November 2020, 1:29 pm
Mannuli Snake - Updatenews360
Quick Share

அரியலூர் : திருமழபாடி கிராமத்தில் மண்ணுழி பாம்பை பிடித்த இளைஞர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

அரியலூர் மாவட்டம் திருமழபாடி கிராமத்தில் உள்ள கொள்ளிடக் கரையில் இளைஞர்கள் இரவு நேரத்தில் விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது கரையில் இருந்து அருகில் உள்ள வீதீக்கு ஏதோ ஊர்ந்து செல்வதைக் கண்ட இளைஞர்கள் அதனை பிடிக்க முயற்சித்தனர்.

அப்போது பிடிப்பட்டது மண்ணுழிப்பாம்பு என தெரியவந்தது. இதனையடுத்து பாம்பை சாக்குப்பையில் பிடித்து வைத்து இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பொதுவாக பாம்பு என்றாலே படையும் நடுங்கும். ஆனால் மண்ணுழி பாம்புக்கு விஷம் இல்லை, விசித்தர பாம்பு மற்றும் மவுசுள்ள பாம்பு என்பதால், பாம்பு வந்த செய்தியை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மண்ணுழிப்பாம்பை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

Views: - 36

0

0