நிர்வாணமாக கொள்ளையடிக்கும் விநோத திருடன் : பொறியில் சிக்கிய NUDE THIEF.. கோவையில் திகிலூட்டிய கோச்சடையான்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2021, 12:09 pm
Cbe Nude Theif - Updatenews360
Quick Share

கோவை : கடந்த பல மாதங்களாக போலீசுக்கு தண்ணிகாட்டிய விசித்திர நிர்வாண கொள்ளையனை கோவை சிங்காநல்லூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து பொறிவைத்து பிடித்தனர்.

கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் தங்கள் முகத்தை மறைக்க துணியை சுற்றியோ, அல்லது மாஸ்க் அணிந்தோ, முகமூடிகளை அணிந்தோ கொள்ளையடிப்பது வழக்கம்.

ஆனால் எப்படி கொள்ளையடித்தாலும் மக்களை காக்கும் காவல்துறையினர் கண்டுபிடித்து விடுகின்றனர். சமீபத்தில் தமிழகத்தில் ஜட்டியுடன் திருடன்கள் நடுநிசியில் உலாவந்தனர். அது போல கோவையில் கடப்பாரை திருடர்களும் தங்கள் பங்குக்கு தனி பாணியை காண்பித்தனர். அதே போல பெட்ரூமை நோட்டமிடும் சைக்கோக்கள், உள்ளாடைகளை மட்டும் திருடும் கொள்ளையன்களும் உலா வந்தனர்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி தற்போது கோவையில் திகிலூட்டும் வகையில் ஒட்டுத்துணி அணியாமல், முகத்தை மறைத்து உலா வரும் நிர்வாண கொள்ளையனை போலீசார் பிடித்துள்ளனர்.

கோவையில் இருசக்கர வாகன ஷோரூம், மற்றும் நான்கு சக்கர வாகன ஷோரூம்களை மட்டும் குறிவைத்து கொள்ளையடிக்கும் இந்த நிர்வாண கொள்ளையன், ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்திற்கு தாவுவதும், நிர்வாண கோலத்தில் ஷோரூம்மில் திரிந்து கொள்ளையடித்து செல்வது போன்ற சினிமாவை மிஞ்சும் செயலாக இருந்தது.

கோவை இராமநாதபுரம், பொள்ளாச்சி, சென்னை, ஈரோடு, மதுரை உட்பட பல்வேறு இடங்களில் நிர்வாண கோலத்தில் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.

இந்த நிர்வாண கொள்ளையில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் பழைய வழுக்கு தெருவை சேர்ந்த கோச்சடை என்ற பாண்டியன் என்பது தெரியவந்தது. முகம் தெரியாத இந்த நபரை பிடிப்பதில் போலீசாருக்கு சவாலான காரியமாக இருந்தது.

கோச்சடை (எ) பாண்டியன்

ஒவ்வொரு முறையும் ஷோரூம்களில் திருட்டு நடக்கும் போதெல்லாம் போலீசாரை சுலபமாக ஏமாற்றி விட்டு செல்லும் இந்த நிர்ணவாண கொள்ளையன் கோவை சிங்காநல்லூர் போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளான்.

நிர்வாண கோலத்தில் திருட்டில் ஈடுபடும் இந்த விசித்திர கொள்ளையனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 389

0

0