ராமதாஸ், கமல்ஹாசன் கூறியது உண்மை என்றால் துறை ரீதியாக கடும் நடவடிக்கை : அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை!!

17 May 2021, 5:47 pm
Senthil Balaji - Updatenews360
Quick Share

கரூர் : எந்த ஊரில் எந்த மாவட்டத்தில் மின்சார வாரியம் கூடுதல் டெபாசிட் வாங்கியது என்பது தெரிந்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், காகிதபுரம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கூடிய படுக்கையறை அமைப்பதற்கான ஆய்வு கூட்டம் மின்துறை மற்றும் மது விலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ உள்ளிட்ட அரசு அதிகாரிகள், ஆலை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, கரூர் மாவட்டத்தில் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தேவைப்படுவதால் TNPL நிர்வாகத்துடன் பேசி ஒருவாரத்திற்குள் TNPL திருமண மண்டபத்தில் 150 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் ஏற்பாடு செய்வதற்கு பேசி நாளை அதற்கான பணிகள் தொடங்க இருப்பதாக அமைச்சர் கூறினார்.

மேலும், தமிழக அளவில் மின்கட்டணத்தை பொறுத்தவரை தேவையான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மின்வாரியம் சார்பில் கூடுதல் டெபாசிட் வசூலிக்க கூடாது என மின்வாரியத்திற்கு கடந்த 10 ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது எனவும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் ஒவ்வொரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு, பொதுவாக கூறியுள்ளதாகவும் எந்த இடத்தில், எந்த ஊரில் இதுபோன்று வசூலிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு கூறினால் துறை கண்டிப்பாக அதன்மீது நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறினார்.

மேலும், மின்சார வாரியம் கூடுதல் டெபாசிட் வசூலிக்கப்படாது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டமாக கூறினார்.

Views: - 310

0

0