பழம் சாப்பிட்டுவிட்டு தண்ணீர்: பள்ளி வளாகத்தில் துடித்து இறந்த மாணவன்: அதிர்ச்சியில் நிர்வாகம்….!!
Author: Sudha11 August 2024, 9:37 am
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரசு பள்ளியில் உணவு இடைவேளையில் நாவல் பழம் சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்த மாணவன் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவன் மகேந்திரன்.
பள்ளி உணவு இடைவேளையின் போது மகேந்திரன் உணவு சாப்பிட்டு விட்டு பள்ளி வளாகத்தில் இருந்த நாவல் மரங்களிலிருந்து கீழே விழுந்த பழங்களை எடுத்து சாப்பிட்டுள்ளார்.அதன் பிறகு தண்ணீர் குடித்துள்ளார்.சிறிது நேரத்திலேயே பள்ளி வளாகத்திலேயே மாணவன் மகேந்திரன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து மாணவனின் இறப்பு குறித்து விசாரணை நடத்தினர்.மாணவர் நாவல் பழம் சாப்பிட்டதால் உயிரிழந்தாரா?அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா என்பது உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.மாணவர் பள்ளியில் உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0
0