“முயற்சி ஒன்றே வெற்றிக்கு காரணம்“ மருத்துவ படிப்பு தரவரிசையில் முதலிடம் பிடித்த மாணவன் : நன்றி கூறி நெகிழ்ச்சி!!

16 November 2020, 5:11 pm
First Place - Updatenews360
Quick Share

திருப்பூர் : மருத்துவப் படிப்பில் தரவரிசை பட்டியில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சார்ந்த ஸ்ரீஜன் 710 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார். 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வெள்ளகோவில் மாணவன் நீட் தேர்வில் முதலிடம் பிடித்திருந்தார். இளங்கலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில்  செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்றது.

நீட் தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் 16ம் தேதி வெளியாகியது . மொத்தமுளள 720 மதிப்பெண்ணுக்கு 710 மதிப்பெண் பெற்று நாமக்கல் கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்தில் படித்த திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 710 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து இருந்தார் . 

இந்த மாணவன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 380 மதிப்பெண் எடுத்துள்ளார். தொடர்ந்து அவர் நாமக்கல்லில் உள்ள கிரீன் பார்க் நீட் கோச்சிங் செண்டரில் மீண்டும் படித்து நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தமிழகத்தில் முதலிடம் பிடித்தும் இந்தியா அளவில் 8 இடமும் பிடித்திருந்தார்.

இந்நிலையில் இன்று  தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. அதிலும் வெள்ளகோவில் மாணவன் ஸ்ரீஜன் முதலிடம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் இதற்க்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,நண்பர்கள் மற்றும் கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்திருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார் .

Views: - 17

0

0