காணும் பொங்கலன்று கடலில் குளித்த மாணவன் மாயம்: 2வது நாளாக தேடும் பணி தீவிரம்..!!

17 January 2021, 1:43 pm
boy sea - updatenews360
Quick Share

விழுப்புரம்: மரக்காணம் அருகே காணும் பொங்கலையொட்டி கடலில் குளித்த மாணவன் மாயமானார். 2 வது நாளாக தேடுதல் பணி தொடர்கிறது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி. அவரது மகன் பிரபு. இவர் புதுவை காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். காணும் பொங்கலையொட்டி பிரபு கூனிமேடு பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களுடன் மரக்காணம் அருகே நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள கடலுக்கு குளிக்க சென்றார்.

பின்னர் பிரபு கடலில் இறங்கி அவரது நண்பர்களுடன் கடலில் குளித்தார். அப்போது கடலில் எழுந்த அலையில் சிக்கி பிரபு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். இதை பார்த்த அவரது நண்பர்கள் அந்த பகுதியில் உள்ள மீனவர்களிடம் உதவி கேட்டுள்ளனர். அங்கு ஓடிவந்த மீனவர்கள் கடலில் இறங்கி மாணவனை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மரக்காணம் போலீசாருக்கும், கடலோர காவல்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் படகு மூலம் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவுவரை தேடியும் மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் திரும்பி சென்றனர். பின்னர் 2வது நாளாக இன்றும் கடலில் மாயமான மாணவன் பிரபுவை தேடும் பணியை தொடர்ந்தனர். அந்த பகுதி மீனவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 4

0

0