பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் அடாவடி : காவல் நிலையம் முன் பேருந்தை நிறுத்தியதால் கண்ணாடி உடைப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2022, 9:48 pm
Govt Bus - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : பேருந்து படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை ஓட்டுநர் கண்டித்து காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தியதால் ஆத்திரத்தில் அரசு பேருந்து கண்ணாடியை மாணவர்கள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் மாநகர அரசுப்பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

மாணவர்களின் அடாவடியை கண்டித்து ஓட்டுனர் பேருந்தை காவல் நிலையத்தில் நிறுத்தியதால் ஆத்திரத்தில் தாராட்சி தொம்பரம்பேடு இடையே பேருந்து சென்றபோது பேருந்து கண்ணாடியை அடித்து உடைத்த மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த ஊத்துக்கோட்டை காவல்துறையினர் பேருந்து கண்ணாடி உடைத்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 338

0

0