தூய்மை பணியாளர்கள் லீவு எடுத்தா இப்படியா பண்ணுவீங்க : பள்ளி கழிவறையில் வேலை செய்யும் மாணவர்கள்…அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2022, 5:18 pm
School Toilet Cleaning - Updatenews360
Quick Share

தருமபுரி : பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி அருகே பள்ளி கழிவறைக்கு தண்ணீர் கொண்டு மாணவர்கள் பணி செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி அடுத்த கும்மனூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 81 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் தூய்மைப் பணியாளர்கள் இல்லாததால் பள்ளி மாணவர்களே தண்ணீர் தொட்டியில் ஆபத்தை உணராமல் பக்கெட்டில் தண்ணீர் எடுத்து சென்று கழிவறைக்கு கொண்டு சென்று சுத்தம் செய்யும் வீடியோ வாட்சாப்பில் வைரலாகி வருகிறது.

மாணவர்களை பள்ளியை சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய வைக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தும் தொடர்ந்து இது போன்று பள்ளிகளில் மாணவர்களை வேலை வாங்கும் செயல் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் ஈரோடு மாவட்டத்தில் அரசுப்பள்ளிக்கு காலையில் முதல் முதலாக வரும் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ வைரலாகி வந்த நிலையில் இன்று தருமபுரி மாவட்டத்தில் இது போன்ற அரசு மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ வைரலாகி உள்ளது.

Views: - 663

0

0