ஆசிரியர்களின் கழிவறைக்கு தண்ணீர் சுமந்து செல்லும் மாணவர்கள் : அரசு உதவி பெறும் பள்ளிகளில் அவலம்.. வைரலாகும் ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2022, 6:01 pm
School Students Clean Issue - Updatenews360
Quick Share

கொங்கராயகுறிச்சியில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகள் 200 மீட்டர் தூரத்தில் உள்ள கழிவறைக்கு மாணவ மாணவிகளே தண்ணீர் கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் அரசு உதவிபெறும் டிடிடிஏ தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை, அரபாத்நகர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 60 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த மாணவிகளை தினம்தோறும் சுழற்சி முறையில் பள்ளி வளாகங்களை பெருக்க வைப்பது, குப்பைகளை பள்ளியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள குப்பை தொட்டியில் கொண்டு போட வைப்பது போன்ற வேலைகளை பள்ளி தலைமை ஆசிரியர் செய்ய வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.

மேலும் பள்ளி வளாகத்தில் கழிவறை இல்லாததால் பள்ளியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள கழிவறைக்கு தினம்தோறும் மாணவ மாணவிகளை தண்ணீர் கொண்டு செல்ல வற்புறுத்துவது, ஆசிரியர்களின் கழிவறைக்கும் தண்ணீர் கொண்டு செல்ல வற்புறுத்தப்படுகின்றனர்.

இதுகுறித்து மாணவ மாணவிகள் தங்களின் வீட்டில் கூற கூடாது எனவும் ஆசிரியர்கள் கண்டிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவ மாணவிகள் குப்பைகளை பெருக்குவது, கழிவறைக்கு தண்ணீர் கொண்டு செல்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே பள்ளி வளாகங்களை சுத்தம் செய்ய 100 நாட்கள் பணியாளர்களை பயன்படுத்தி கொள்ளலாம் என நீதிமன்றம் மற்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அந்த விதிகளை பள்ளி நிர்வாகங்கள் காற்றி பறக்கவிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Views: - 324

0

0