“புத்தகத்த எடுத்துட்டு என் வீட்டுக்கு வா, இல்லனா ஃபெயில் ஆக்கிருவ“ : மாணவிகளிடம் லீலைகள்.. முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளி ஆசிரியர் கைது!!

23 June 2021, 12:14 pm
Teacher Arrest - Updatenews360
Quick Share

தமிழகத்தில் நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சென்னையில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியில் வெளியான பாலியல் வன்கொடுமை பிரச்சனை தற்போது தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் இருந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

பிஎஸ்பிபி பள்ளியை தொடர்ந்து பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் புகார் கொடுத்த நிலையில், கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ், தடகள பயிற்சியாளர் நாகராஜ், சிவசங்கர் பாபா என கைது எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் அந்த வரிசையில் சிக்கியுள்ளவர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளி அறிவியில் ஆசிரியர் ஹபீப். மாணவிகளை மிரட்டி பணிய வைக்க முயன்ற ஆடியோவை வைத்து பள்ளி மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

அறிவியில் ஆசிரியர் ஹபீப், மாணவிகள் வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தை அறிந்த செல்போனில் மாணவிகளுடன் சபலமாக பேசுவதும், சமயத்தில் உன் வீட்டிற்கு தெரியாமல் புத்தகங்களுடன் தனது வீட்டிற்கு வா இல்லை என்றால் உன்னை பெயிலாக்கி விடுவேன் என மிரட்டியும் உள்ளார்.

இதற்கு முன் இந்த மாணவிகள் எல்லாம் என் வீட்டிற்கு வந்துள்ளனர் என சில மாணவிகளின் பெயரையும் கூறியுள்ளான் அறிவியல் ஆசிரியர் ஹபீப். நான் பேசுவதை யாரிடமும் சொல்ல கூடாது என்றும், நமக்குள் மட்டுமே இந்த பேச்சு இருக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். ஆனால் இந்த ஆடியோ இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து மாணவிகள் ஆசிரியர் மீது புகார் அளித்ததை தொடர்ந்து ராமநாதபுரம் ஏடிஎஸ்பி தலைமையில் முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி ராகவேந்திரா ரவி, ஆய்வாளர் மோகன் ஆகியோர் ஆசிரியரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஆடியோவில் பேசியது ஆசிரியர் ஹபீப் தான் என உறுதிப்படுத்திய போலீசார் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Views: - 268

0

0