காலால் வரைந்த ஓவியம்…தன்னம்பிக்கை நட்சத்திரமான மாணவர்: கல்லூரி அளவிலான போட்டியில் அசத்தல்..!!

Author: Rajesh
7 March 2022, 3:52 pm
Quick Share

கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்று வரும் போட்டிகளில் மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

கோவை அர‌சு கலைக்க‌ல்லூரியில் ஆங்கில‌ இல‌க்கிய‌த்தை மைய‌ப்ப‌டுத்தி 5 நாள்கள் போட்டிக‌ள் ந‌ட‌த்த‌ப‌டுகின்றன‌. மீம்ஸ் ,ர‌ங்கோலி, பேச‌ன் ப்ரைடு என போட்டிகள் இந்த‌ வார‌ம் முழுவ‌தும் ந‌டைபெறும்

ஆங்கில‌ இல‌க்கிய‌த்தை மைய‌ப்ப‌டுத்தி ப‌ல்வேறு ஓவிய‌ங்க‌ள் முக‌த்தில் வ‌ரைய‌ப்ப‌ட்டுள்ள‌து. அதில் அக்ப‌ர் அலி என்ற முதலாம் ஆண்டு வ‌ர‌லாறு ப‌டிக்க‌கூடிய‌ மாண‌வ‌ன் காலில் ஓவிய‌ம் வரைந்து அச‌த்தியுள்ளார்.

புலிக‌ள் பாதுகாப்பு ப‌ற்றி இவ‌ர் வ‌ரைந்துள்ள‌ ஓவிய‌ம் காண்போரை க‌வ‌ரும் வ‌கையில் வ‌ரைப்ப‌ட்டிருந்தது . இந்தநிக‌ழ்ச்சியில் 12 க‌ல்லூரிக‌ளை சார்ந்த 100 க்கும் மேற்ப்ப‌ட்ட‌ மாண‌வ‌ர்க‌ள் க‌ல‌ந்து கொண்டு இய‌ற்கையின் அத்தியாய‌ம் , புலிக‌ள் பாதுகாப்பு , ஆதாம் ஏவால் , அப்துல்கால‌மின் அக்னிச்சிற‌குக‌ள் , பினிக்ஸ் , போன்ற ஓவிய‌ங்க‌ள் வ‌ரைந்து அச‌த்தின‌ர். இதில் வெற்றி பெற்ற‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு ப‌ரிசுக‌ள் ம‌ற்றும் சான்றித‌ழ் வ‌ழ‌ங்ப்ப‌ட்ட‌து . வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் முக ஓவியம் நிகழ்ச்சி கலந்து கொள்வார்கள் என தெரிவித்தனர்

Views: - 576

0

0