பள்ளியில் சத்துமாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் : 40 மாணவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. அரசு மருத்துவமனையில் சிகிச்சை!!

Author: Udayachandran RadhaKrishnan
24 June 2022, 5:45 pm
School Students Dizzy - Updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாலி புது காலனி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்று சத்து மாத்திரை வழங்கி உள்ளனர்.

இந்த மாத்திரைகளை சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டதால் அனைவரையும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மருத்துவமனை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பள்ளியில் வழங்கப்பட்ட சத்துமாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு சேரவில்லையா, மாத்திரை காலாவதியா அல்லது ஒவ்வாமையா என சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 260

0

0