ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு : மக்களுக்கான பணியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!!

3 July 2021, 7:01 pm
SP Velumani- Updatenews360
Quick Share

கோவை : கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதியிலும் நோய்தொற்று காலத்தில் சிரமப்படும் மக்களுக்கு, கட்சி வேறுபாடுகள் இல்லாமல் சத்தான , உணவுகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விராலியூர், நரசிபுரம், வெல்லிமலைபட்டினம், ஏ.டி காலனி, பட்டியார் கோவில் பதி, மடக்காடு, தானிக்கண்டி ஆசிய மலை கிராம பகுதியில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை எளிய மக்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மதிய உணவு வழங்கினார்.

மேலும் பொதுமக்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர குடிநீர், நோய்தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள, முககவசங்கள், கிருமிநாசினி, ஆகியவற்றையும் வழங்கினார். இதனை தொடர்ந்து நரசிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற அவர் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Views: - 148

0

0