தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து ஆய்வு : தமிழகம் வருகிறது தேர்தல் ஆணைய குழு!!

4 February 2021, 10:57 am
EC Tn- Updatenews360
Quick Share

தமிழகத்தில் சட்ப்பேரவை தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய குழு தமிழகம் வருகிறது.

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழக தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தேர்தல் அணைய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் அடங்கிய குழு தமிழகம் வருகிறது.

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் இந்திய தேர்தல் ஆணைய குழு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது, வரும் பிப்ரவரி 10 மற்றும் 11ஆம் தேதிகளில் இந்த பணி தொடங்க உள்ளது.

மேலும் சென்னையில் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்யும் இந்திய தேர்தல் ஆணைய குழு, சில அரசியல் கட்சி நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளது. மேலும் மாவட்ட தேர்தல் அலுவலகர்கள், எஸ்பிக்கள், தமிழக தலைமை செயலாளர் அடங்கிய முதுநிலை அரசு அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது.

Views: - 0

0

0