உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா! புன்செய் புளியம்பட்டி காவல்நிலையம் மூடல்.!

5 August 2020, 3:11 pm
sAthy police Station cLosed - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி உதவி காவல் ஆய்வாளருக்கு கொரானா தொற்று உறுதியானதை தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு இன்று கொரானா தொற்று உறுதியானது. இதனையடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது.

அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர்கள் குடும்பத்தினர் மற்றும் காவலர்கள் 80 நபர்களுக்கு புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர்.புளியம்பட்டி நகராட்சி ஊழியர்கள் காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதியில் கிருமி நாசினி தெளித்தனர்.

கடந்த சில நாட்களாக புளியம்பட்டியில் புதிய தொற்று கண்டுபிடிக்கப்படாத நிலையில் இன்று உதவி காவல்துறை ஆய்வாளருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது புளியம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.