சென்னையில் புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்: முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு ரூ.500 அபராதம்..!!

Author: Aarthi Sivakumar
25 June 2021, 10:27 am
chennai train emu - updatenews360
Quick Share

சென்னை: சென்னையில் பொதுமக்களுக்காக புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் இன்று முதல் சென்னை புறநகர் ரலில் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பை வெளியிட்டது. இந்தநிலையில் சென்னையில் பொதுமக்களுக்காக புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கி உள்ளது.

ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் யாரும் முகக்கவசம் இல்லாமல் இருந்தால் அவர்களிடம் ரூ .500 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் , பெண்களுடன் பயணிக்கக்கூடிய 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் பீக்ஹவர்ஸ் என்று சொல்லப் படும் முக்கிய நேரத்தைத் தவிர்த்து பிற நேரங்களில் பொதுமக்கள் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரையும் , இரவு 7 மணி முதல் கடைசி நேரம் வரையிலும் ஆண்கள் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரயில்கள் இயக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்துள்ள தெற்கு ரயில்வே மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், அத்தியாவசிய பணியாளர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் ரெயிலில் பயணிக்கலாம் என அனுமதி அளித்துள்ளது. தொலைதூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களை பொருத்தவரை ஒரு வழிப்பயணம் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு ரிட்டன் டிக்கெட் அளிக்கப்படுவதில்லை.

Views: - 167

0

0