அளவுக்கதிகமாக கறி சோறு சாப்பிட்டவர் திடீர் மரணம் : மாமிச பிரியர்கள் அதிர்ச்சி!!

2 February 2021, 6:55 pm
Non Veg Dead - Updatenews360
Quick Share

மதுரை : உறவினர் வீட்டு விருந்தில் அளவுக்கு அதிகமாக அசைவ உணவை சாப்பிட்டவர் மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ராஜா மில் ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 43). இவர் நேற்று உறவினர் வீட்டில் விருந்து ஒன்றில் குடும்பத்துடன் கலந்து கொண்டார். அங்கு கறிசோறு பரிமாறப்பட்டது.

அப்போது அளவுக்கு அதிகமாக அசைவ உணவை உட்கொண்ட நிலையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னர் மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இவருடைய மனைவி சுகந்தி கொடுத்த புகாரின் பெயரில் திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 0

0

0