குமரி கடற்கரையில் திடீர் அனுமதி மறுப்பு : சுற்றுலா பயணிகளை திருப்பிய அனுப்பிய போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2021, 5:23 pm
Kumari Not Allowed - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடற்கரைக்கு சென்ற சுற்றுலா பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினர்.

கொரோனா கட்டுபாட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலாப்பயணிகள் கடற்கரைக்கு செல்ல தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வார இறுதி நாட்களான வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுவதால் கடற்கரை செல்ல அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் இன்று வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் திரிவேணி சங்கம கடற்கரை, சங்கிலிதுறை, கடற்கரைசாலை பகுதியில் போலீசார் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டனர்.

போலீசார் எச்சரிக்கையை மீறி கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினார் மேலும் சுவாமி விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் படகு சேவை ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Views: - 265

0

0