குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்.. மாயமான சிறுவன் : அலறி ஓடிய மக்கள்.. ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2024, 4:15 pm
courtallam
Quick Share

குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்.. மாயமான சிறுவன் : அலறி ஓடிய மக்கள்.. ஷாக் வீடியோ!

தமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்த நிலையில், கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இன்னுமே கனமழைக்கான வாய்ப்பு இருப்பதால் 19,20 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்டும் கொடுக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.

பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நீர்நிலைகளில் வெப்பத்தை தணிக்கவும், பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில், தென்காசியில் பெய்து வரும் மழை காரணமாக பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குறித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட உடன் உடனே அலறியடித்து வெளியேறினர்.

இந்த வெள்ளப்பெருக்கில் திருநெல்வேலியைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின் (17) அடித்துச் செல்லப்பட்டார். தற்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அந்த சிறுவனைத் தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலியைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின் தனது குடும்பத்தாருடன் குளித்து கொண்டு இருந்த சமயத்தில் திடீரென வெள்ளம் ஏற்பட்ட நிலையில் அவர் அடித்து செல்லப்பட்டார்.

பல சுற்றுலா பயணிகள் அந்த பகுதியில் குளித்து கொண்டு இருந்த நிலையில், திடீரென வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக மக்கள் பலரும் அலறி அடித்து ஓடினார்கள்.

மேலும் படிக்க: பிளாக்மெயில் செய்யும் சீனா? மோடி வாய் திறக்காதது குறித்து தேர்தலுக்கு பின் வெளியிடுவேன் : சு.சாமி ட்விஸ்ட்!

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 174

0

0