மதுரை அரிசி அரவை ஆலைகளில் திடீர் ஆய்வு : வருவாய்த் துறையினர் அதிரடி!!

4 February 2021, 1:18 pm
Rice Mill Inspectoion - Updatenews360
Quick Share

மதுரை : அரிசி அரவை ஆலைகளில் வருவாய்த் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை சிந்தாமணி பகுதியில் நூற்றுக்கணக்கான அரிசி அரவை ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமைகள் பணியில் உள்ளனரா என மதுரை மாவட்டம் மேலூர் கோட்டாச்சியர் ரமேஷ் தலைமையில் வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை சார்பில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆலை வளாகம் மற்றும் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். மேலும் ஆலை உரிமையாளர்களிடம் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமைகளை பயன்படுத்துவது சட்டவிரோதமான செயல் என அறிவுறுத்தல் செய்தனர்.

Views: - 1

0

0