கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடல் – பீதியில் மீனவர்கள்

Author: Aarthi
3 October 2020, 9:04 am
kaniyakumari sea- updatenews360
Quick Share

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் 50 அடி தூரத்திற்கு திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கன்னியாகுமரியில் இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்ககடல் ஆகிய முக்கடல் சங்கமிக்கின்றன. இங்கு கடந்த 2 நாட்களாக கடலின் தன்மை மாற்றம் அடைந்து வருவதால் பொதுமக்கள் சிறிது அச்சமடைந்திருந்தினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென உள்வாங்கிய கடல், இரவு முழுவதும் உள்வாங்கிய நிலையில் காணப்பட்டு, விடிந்த பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியது.

இதனைதொடர்ந்து மீண்டும் நேற்று கடல் 2-வது நாளாக மீண்டும் கடல் உள்வாங்க தொடங்கியது. சிறிது நேரத்தில் கடல் நீர் சுமார் 50 அடி தூரத்துக்கு உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பெரும் பாறைகள், மணல் திட்டுக்கள் வெளியே தெரிய தொடங்கின.

மேலும் கடலுக்குள் இருந்த விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை போன்ற இடங்கள் திடல் போல காட்சி அளித்தன. கடல் உள்வாங்கிய நிகழ்வு பொதுமக்கள் மற்றும் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 54

0

0