காதல் திருமணம் செய்த வாலிபர் திடீர் தற்கொலை : மனைவி வீட்டில் தூக்கிட்ட சோகம்!!

16 January 2021, 8:12 pm
Suicide -Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அருகே திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில் பெண் குழந்தை பிறந்த 20 நாட்களில் காதல் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் ருத்திராவதி கிராமத்தில் வசிப்பவர் சர்மிளா (வயது 23). இவர் ஒட்டன்சத்திரம் அருகே நாகனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரேம்குமார் (வயது 26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் சர்மிளாவுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் இன்று பிற்பகல் பிரேம்குமார் ருத்ராவதியில் உள்ள தனது மனைவியின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரேம்குமாரை மீட்டு தாராபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தது பரிசோதனை செய்ததில் வரும் வழியிலேயே பிரேம்குமார் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், பிரேம்குமாருக்கும், சர்மிளாவிற்கும் காதல் திருமணம் முடிந்து ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில் பெண் குழந்தை பிறந்து 20 நாட்களே ஆன நிலையில் பிரேம்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0