ஆட்டோ ஓட்டுநர் கொலையில் திடீர் திருப்பம் : பெண் வக்கீல் குடும்பத்தினர் கூண்டோடு கைது!!
29 November 2020, 3:12 pmதிருச்சி : ஆடு திருடிய கும்பல் குறித்து புகாரளித்த ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் வக்கீல் குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி திருவானைக்காவல் அடுத்துள்ள மணல்மேட்டு பகுதியில், ஆடு திருடிய கும்பலை
அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் தட்டிக் கேட்டார். பின்னர் இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த மாதம், 26ம் தேதி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் முருகன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி மேற்பார்வையில்
ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் தலைமையில் தனிப்படை அமைத்து 11பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட அவரது சகோதரி வக்கீல் முத்துலட்சுமி (வயது 25) தந்தை குணசேகர் (வயது 55), தாயார் பரமேஸ்வரி (வயது 50) இந்த கொலைக்கு உதவியாக இருந்த முத்துகுமார் (வயது 49), விக்னேஷ் (வயது 30) ஆகியோரை உடுமலைப்பேட்டையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
0
0