திமுக பிரமுகர் மரணத்தில் திடீர் திருப்பம் : வீட்டு வேலைக்காரனுடன் உல்லாசமாக இருக்க மனைவியே கொலை செய்தது அம்பலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2022, 4:47 pm
DMK Hubby Murder -Updatenews360
Quick Share

நாகை : வீட்டு வேலைக்காரனுடன் உல்லாச தொடர்பை தவிர்க்க முடியாத மனைவி திமுக பிரமுகரை விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அருகே வேட்டைக்காரனிருப்பு பகுதியில் உள்ள சடையன்காடு பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பவர் திமுகவில் ஒன்றிய குழு உறுப்பினராகவும் திமுக கிளை செயலாளருமாக உள்ளார்.

இவர் தனது மனைவி சூர்யாவுடன் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் தேவேந்திரனுக்கு மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார்.

திருச்சியில் உள்ள வெல்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் கடந்த டிசம்பர் 15ம் தேதி குணமடைந்த பின் வீட்டிற்கு திரும்பியுள்ளார். ஆனால் கடந்த ஜனவரி 4ம் தேதி மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனைக்கு சென்ற போது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், திருச்சி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து தேவேந்திரனை அவரது உறவினர்கள் திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 6ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை வேட்டைக்காரனிருப்புக்கு கொண்டு வந்து மயானத்தில் வைத்து உறவினர்கள் இறுதி சடங்கு செய்துள்ளனர்.

கணவர் உயிரிழந்த துக்கம் கூட இல்லாமல் மனைவி சூர்யா தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இதை கவனித்த உறவினர் சதீஷ்கண்ணா என்பவர் சந்தேகமடைந்து சூர்யா பேசிக்கொண்டிருந்த தேவேந்திரன் செல்போனை சோதனை செய்துள்ளார்.

அப்போது தேவேந்திரன் வீட்டில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவருடன் சூர்யா அதிக நேரம் பேசியதை கண்டறிந்தார். பின்னர் உறவினர்கள் சந்திரசேகரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், சூர்யாவுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் துருவி துருவி நடத்திய விசாரணையில், கடந்த டிசம்பர் 28ஆம் தேதி சூர்யா மற்றும் சந்திரசேகர் சேர்ந்து தேவேந்திரனுக்கு சாப்பிட்ட உணவில் எலி மருந்தை கலந்து கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட தேவேந்திரன் உயிரிழந்தார்.

இதையடுத்து வேலைக்காரன் சந்திரசேகரனையும், கணவனை கொலை செய்த சூர்யாவையும் கைது செய்த போலீசார் வேதாரணியம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து இருவரையும் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

விட்டு வேலைக்காரனுடன் உல்லாசம் அனுபவிக்க தாலி கட்டிய கணவனை விஷம் வைத்து கொன்ற சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
……

  • Madurai நான் என் ஹீரோவை பற்றி தான் பேசுவேன்… வில்லன்களை பற்றி பேசுவது என் வேலை இல்ல : சூடான சு.வெங்கடேசன் எம்பி!
  • Views: - 3589

    0

    0