தனியார் ஓட்டல் மேனேஜர் மர்மச்சாவில் திடீர் திருப்பம் : சிசிடிவி கனெக்ஷனை கட் செய்த வடமாநில இளைஞர் சிக்கினான்.. வெளியான உண்மை!!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2022, 4:30 pm

மதுரையில் தனியார் விடுதி மேலாளர் மர்ம சாவில் திடீர் திருப்பமாக வடமாநில இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையில் தனியார் விடுதி மேலாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 30) என்பதும், இவர் மதுரையில் உள்ள துணிக்கடைகளில் ஆர்டர் பெற்று வடமாநிலத்தில் இருந்து மொத்த துணி வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் மாத வாடகைக்கு அந்த லாட்ஜில் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் இன்று அதிகாலையில் ரூமை காலி செய்து விட்டு சென்ற போது லாட்ஜு மேலாளர் உறங்கி இருந்த போது விடுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களை அணைத்து விட்டு மேலாளரிடம் இருந்து செயின் மற்றும் மோதிரத்தை திருட முயற்சி செய்துள்ளான். அப்போது விழித்துக் கொண்ட மேலாளர் தடுத்த போது மேலாளரை கொலை செய்து நகையை பறித்து தப்பி உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து திடீர்நகர் போலீசார் மேற்கொண்டு விசாரணையில் கோபால கிருஷ்ணனை பிடித்து மேலும் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

  • I would rather not get married.. 37-year-old Simbu's heroine open திருமணம் செய்யாமல் இருக்கவே விரும்புகிறேன்.. 37 வயதாகும் சிம்பு பட நாயகி ஓபன் டாக்!