கோவையில் தனியார் கல்லூரி மாணவர் விடுதியில் தற்கொலை : அரியர் தேர்வு எழுத வந்த போது விபரீதம்!!

20 November 2020, 10:22 am
Student Suicide - Updatenews360
Quick Share

கோவை : பிரிமியர் மில்ஸ் பகுதியில் செயல்பட்டு தனியார் மருத்துவ கல்லூரியில் அரியர் தேர்வு எழுத வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மகன் நவீன்குமார் (வயது 22). கோவை ஒத்தக்கல்மண்டபம் அருகே உள்ள பிரிமியர் மில்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் கற்பகம் மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.

தற்போது கொரோனா காரணமாக ஆன் லைன் வகுப்புகள் நடந்து வரும் நிலையில், நவீன்குமார் இரண்டாம் ஆண்டில் வைத்த அரியர் தேர்வு எழுத கடந்த 5 நாட்களுக்கு முன் தனது தாயுடன் கல்லூரிக்கு வந்துள்ளார்.

மேலும் நவீன்குமார் கடந்த சில தினங்களுக்கு முன் மன உளைச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இதனால் மூன்று நாட்கள் நவீனுடன் அவரது தாயார் தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று காலை நவீனின் தாய் தனது சொந்த ஊருக்கு சென்ற நிலையில் , மாலை நவீன் செல்போனுக்கு அழைத்துள்ளார்.

நீண்ட நேரம் போனை எடுக்காத்தால் சந்தேகமடைந்த பெற்றோர் உடனடியாக கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியருக்கு தகவலை கூறியுள்ளார். அப்போது அவர் சென்று பார்த்த போது நவீன்குமார் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினர் செட்டிபாளையம் போலீசுக்கு தகவல் அளித்தனர். பின் அங்கு வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 1

0

0